Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பெர்லின் தாக்குதல்தாரிக்கு 14 அடையாள அட்டைகள்: அதிர்ச்சியில் அதிகாரிகள்

In ஐரோப்பா
Updated: 06:39 GMT, Jan 6, 2017 | Published: 06:20 GMT, Jan 6, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Sambavi
_93274801_037094930-1

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கடந்த மாதம் கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ட்ரக் வண்டித் தாக்குதலின் சூத்திரதாரியான அனிஸ் அம்ரிக்கு 14 விதமான பெயர்களில் அடையாள அட்டைகள் இருந்துள்ளன என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவமானது ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் உறையச் செய்த நிலையில், தாக்குதல்தாரியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் விளையாக அடுத்த சில தினங்களுக்குள் இத்தாலிய பொலிஸாரால் அனிஸ்அம்ரி சுட்டிக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், தாக்குதல்தாரி குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய தாக்குதல்தாரியான அனிஸ் அம்ரிக்கு 14 வேறுபட்ட பெயர்களில் அடையாள அட்டைகள் இருந்துள்ளன என்பது அதிகாரிகளுக்கு தற்போது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதேவேளை, அனிஸ் அம்ரியை எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்வதற்கு அனுமதித்த அதிகாரிகளின் கவனயீனமான செயற்பாட்டினை உள்ளூர் அதிகாரிகள் பலரும் விமர்ச்சித்துள்ளனர்.

துனிஷிய நாட்டவரான 24 வயதுடைய அம்ரி North Rhine-Westphalia யில் தன்னை பதிவிசெய்திருந்த போதும், கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பெர்லினிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார் என்று உத்துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg