Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

In இலங்கை
Updated: 06:50 GMT, Jan 6, 2017 | Published: 06:36 GMT, Jan 6, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Risha
ganja

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோகிராம் 650 கிராம் கேரள கஞ்சா மாங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியாவிலும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து ஒரு கிராம் 625 மில்லிக்கிராம் மாபா எனப்படும் போதைப் பொருளும், 755 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மன்னார் மூர்வீதி மற்றும் உப்புக்குளம் பகுதியில் வைத்து குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், மற்றைய நபரிடமிருந்து 60 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பபட்டுள்ளதாகவும், மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாகவும், மன்னார் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg