Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்லைன் கொள்வனவால் முடிங்கியது வணிக அங்காடிகளின் விற்பனை

In
Updated: 09:57 GMT, Jan 6, 2017 | Published: 09:57 GMT, Jan 6, 2017 |
0 Comments
1188
This post was written by : Sambavi
_93283642_gettyimages-630497380

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், பிரித்தானியாவில் 2016ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் கால விற்பனையில் லண்டனில் உள்ள வணிக அங்காடிகள் நிறைந்த சாலைகளில் உள்ள கடைகளுக்கு பெரிய அளவில் இலாபம் கிட்டவில்லை என கூறப்படுகின்றது.

இணைய கொள்வனவு துரிதமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில் அதன் காரணமாக வீதியோர கடைகளின் விற்பனை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை புள்ளி விபரங்களுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் 0.1 சதவீதத்தினால் வீதியோர கடைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், இணைய கொள்வனவானது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 19 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழமையான ஒன்லைன் கொள்வனவு சதவீதமானது டிசம்பர் 25ஆம் திகதிக்கான இறுதி வாரத்தில் அபரிமிதமாக உயர்வடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புள்ளிவிபர அடிப்படையில் இதன் வளர்ச்சி செங்குத்தாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக அங்காடிகள் நிறைந்த சாலைகளில் பொருள் கொள்வனவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை டிசம்பர் முதல் 3 வாரங்களிலும் மிகவும் குறைவாக காணப்பட்ட போதிலும், இறுதி வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை கண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg