Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பில் நிக்கோலா கருத்து

In
Published: 06:59 GMT, Jan 7, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Sylviya
06

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதே ஸ்கொட்லாந்தின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது என குறிப்பிட்ட ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், குறித்த நோக்கில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிச் சந்தையில் பிரித்தானியா தொடர்ந்தும் இருக்கும் பட்சத்தில், பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறும் முயற்சி கைவிடப்படும் என நிக்கோலா விளக்கம் அளித்துள்ளார்.

பிரெக்சிற் தொடர்பில் ஒருமைப்பாடு மற்றும் சமரசத்தை தான் கடைபிடித்து வருவதாக தெரிவித்ததன் பின்னரே ஸ்டர்ஜன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பது தொடர்பில் மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்கொட்லாந்தின் எதிர்க் கட்சிகள் நிக்கோலா ஸ்டர்ஜனை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg