Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வாடி பராடா பகுதியில் யுத்தநிறுத்தம்: மறுத்தது கிளர்ச்சிக்குழு

In
Published: 07:14 GMT, Jan 7, 2017 |
0 Comments
1125

சிரியாவின் டமாஸ்கஸ் அருகே வாடி பராடா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படைகளுக்கு இடையில் யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது என்பதை சிரிய மூத்த கிளர்ச்சிக் குழு அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் தலைநகரின் பிரதான நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு மில்லியன் மக்களுக்கான நீர்விநியோகம் வழங்கும் வாடி பராடாவினை மீளக் கைப்பற்றும் நோக்கில் அரச படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தாக்குதல் ஆரம்பமாகியது.

இந்நிலையில் குறித்த பகுதியில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் அரச தரப்பினர் அதனை மீறியதாக கிளர்ச்சிக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிளர்ச்சிக்குழுவின் அரசியல்துறை பிரிவு தலைவர் தெரிவிக்கையில், போரின் ஆரம்பத்தில் அரச தரப்பினர் நீர் விநியோக நிலையம் மீது இலக்கு வைத்தே குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதாகவும் நீர் இறைக்கும் நிலைய திருத்த பணிகள் மற்றும் மக்கள் வெளியேறுவதற்கு ஏற்ற யுத்த நிறுத்தத்தை கடந்த வியாழக்கிழமை அரச தரப்பினரே மீறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)