Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

புளோரிடா விமானநிலைய தாக்குதல் முட்டாள்தனமான செயல்: மாநில ஆளுநர்

In
Published: 08:24 GMT, Jan 7, 2017 |
0 Comments
1093

புளோரிடா சர்வதேச விமான நிலைய தாக்குதல் மோசமான முட்டாள்தனமான செயல் என மாநில ஆளுநர் ரிக் ஸ்கொட் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவின் ஃபோர்ட் லாவொண்டர்டேல் ஹொலிவூட் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் எட்டுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில ஆளுநர் ரிக் ஸ்கொட், ‘இது எங்கள் நாட்டிற்கு கடினமான ஒரு நாளாக இருந்தது.

சம்பவத்திற்கு நீதி வழங்கப்படும். மாநிலத்தில் இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்களை ஒருபோதும் விடக்கூடாது. அவர்களை சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்புடன் சம்பவம் குறித்து தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)