Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கானாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார் அகுஃபோ அட்டோ

In
Updated: 09:21 GMT, Jan 7, 2017 | Published: 09:19 GMT, Jan 7, 2017 |
0 Comments
1335
This post was written by : Elakkiya

கானாவின் புதிய ஜனாதிபதியாக நானா அகுஃபோ அட்டோ பதவியேற்கவுள்ளார்.

தலைநகர் அக்ராவில் நடைபெறவுள்ள இவருடைய பதியேற்பு விழாவில் சுமார் 11 மாநில தலைவர்கள் மற்றும் 6 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் வீதிகள் யாவும் மூடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னாள் மனித உரிமை வழக்கறிஞரான 72 வயதான அகுஃபோ அட்டோ இலவச உயர் கல்வி வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அத்துடன் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறியிருந்தார்.

புதிய தேசபற்று கட்சியிலிருந்து அகுஃபோ அட்டோ மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இவருடைய வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg