Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சென்னை ஓபன் டென்னிஸ்: பெனோய்ட் மற்றும் துடி செலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

In
Published: 09:03 GMT, Jan 7, 2017 |
0 Comments
1065
aircel

நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் பெனோய்ட் பேர், துடி செலா மற்றும் டேனில் மெட்விதேவ் ஆகியோர் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், போட்டித்தரநிலையில் 5வது இடம் வகிக்கும் பெனோய்ட் பேர், இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடேனை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெனோய்ட் பேர், 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பெடேனை வீழ்த்தி சென்னை ஓபனில் 3வது முறையாக அரைஇறுதியை எட்டினார்.

மற்ற போட்டிகளில், இஸ்ரேலின் துடி செலா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் அல்பெர்ட் ரமோஸ் வினோலசையும், ரஷ்யாவின் டேனில் மெட்விதேவ் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் சுலோவக்கியாவின் ஜோஸிப் கோவலிக்கையும் வீழத்தினர்.