Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Published: 11:53 GMT, Jan 7, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Sylviya
13

இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பில், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று  பரிஸில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜேன் மார்க் (Jean-Marc Ayrault), பாதுகாப்பு அமைச்சர் ஜேன் – யீவ்ஸ் லீ ட்ரியான் (Jean-Yves Le Drian), ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிதா (Fumio Kishida) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டொமோமி இனாடா (Tomomi Inada) ஆகியோர் இவ்வாறு சந்தித்திருப்பது நேற்றுடன் மூன்றாவது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  நாடுகள் ஒன்றிணைந்து இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு பாதுகாப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

அத்துடன், கடலுக்கடியில் ஆளில்லா விமானங்கள் அனுப்பி சோதனை செய்வது தொடர்பிலும் குறித்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg