Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழப்பு!

In
Published: 09:37 GMT, Jan 8, 2017 |
0 Comments
1244
This post was written by : Anojkiyan
fake

சிரியாவின் அலெப்போ மாநிலத்துக்கு உட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி எல்லைப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அஜாஸ் நகர நீதிமன்றம் அருகிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி, தொடர்ந்து உயிரிழந்து வருவதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது. மேலும் சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவாறு எரிந்து உருக்குலைந்து இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையில் உள்ள அலெப்போ மாநிலத்தின் பல பகுதிகளை சிரியாவை சேர்ந்த போராளி குழுக்கள் கைப்பற்றி வைத்துள்ளன. அப்பகுதிகளை மீட்பதற்காக துருக்கி விமானப்படையின் உதவியுடன் சிரியா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner