Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

13 பேரை காவுக்கொண்ட பாக்தாத் தற்கொலை கார் குண்டுதாக்குதல்

In
Published: 10:53 GMT, Jan 8, 2017 |
0 Comments
1138
This post was written by : Anojkiyan

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சந்தை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுதாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததோடு, 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.

சந்தேகிக்கும் வகையில் காலை குறித்த சந்தை பகுதிக்குள் வேகமாக வந்த ஒருகாரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அங்கு நிற்காமல் தப்பிச் செல்ல காரின் சாரதி முயன்றதால் அந்த வாகனத்தின்மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து காரினுள் இருந்த தீவிரவாதி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுஇயக்கியதில் அந்தக்கார் பயங்கரமாக வெடித்து சிதறியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரித்துள்ளனர். இருப்பினும், இது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்டிகொண்டுவருகின்றனர்.