Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வெற்றியின் பின் முதல் முறையாக ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்ளவுள்ள டிரம்ப்!

In
Published: 12:02 GMT, Jan 8, 2017 |
0 Comments
1129
This post was written by : Anojkiyan
donald-trump-grow-up

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது வெற்றியின் பின் முதல் முறையாக ஊடக சந்திப்பொன்றில் எதிர்வரும் புதன் கிழமை கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் போது அமெரிக்க பொருளாதாரத்தின் முன்னேற்ற பாதை மற்றும் சீனாவுடனான தொடர்பு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப், எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

தனது தேர்தல் பரப்புரையின் போது வழங்கியிருந்த உறுதிமொழியை நிறைவேற்ற திட்டம் வகுத்து வரும் டிரம்ப், முதல் கட்டமாக அமெரிக்க எல்லையில் மெக்சிகோ சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் ஊடுருவலை தடுக்க, தடுப்பு சுவர் கட்டும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றார்.