Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நல்லாட்சியின் சுயரூபம் இரண்டு வருடங்களில் வெளிப்பட்டு விட்டது: ஜே.வி.பி.

In இலங்கை
Updated: 12:52 GMT, Jan 8, 2017 | Published: 12:50 GMT, Jan 8, 2017 |
0 Comments
1395
icon_com
This post was written by : Varshini
wijitha-herath

மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்திற்கு மாறாக, அடக்குமுறைகளை பிரயோகித்தும் தாக்குதல்களை நடத்தியும் நல்லாட்சியானது இரண்டு வருடங்களில் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பிரசார செயலாளரான விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள இச் சந்தரப்பத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட பொருளாதாரம், அரசியல் மற்றும் ஜனநாயகம் தொடர்பான சகல வாக்குறுதிகளும் பொய்த்துப்போயுள்ளதென குறிப்பிட்ட அவர், மக்கள் மீது அரசாங்கம் வரி சுமையை திணித்து நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதாக குறிப்பிட்டார்.

அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் காணிகள் பலவந்தமாக பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, எதிர்கால சந்ததிக்கான அபிவிருத்தி தொடர்பில் ரணில் – மைத்திரி ஆட்சி சற்றும் சிந்திப்பதில்லை என்றும் சிந்திக்க தயாராகவும் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே அவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்த விஜித ஹேரத், அன்று மஹிந்த ராஜபக்ஷ செய்ததை இன்று மைத்திரி – ரணில் ஆட்சி செய்து வருகின்றதென மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே நேற்று கட்சி பேதங்களை மறந்து அம்பாந்தோட்டையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் அம்பாந்தோட்டை காணி உள்ளிட்ட நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதை நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசியலில் வங்கோரோத்து நிலையை அடைந்துள்ளவர்கள், மக்களின் இவ்வாறான போராட்டங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்த விஜித ஹேரத் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக் கூடாதென மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg