Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மறைந்த அக்பார் ஹஷேமி ரஃப்சன்ஜானிக்கு பலர் அஞ்சலி

In
Published: 04:39 GMT, Jan 9, 2017 |
0 Comments
1225
This post was written by : Sylviya

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அக்பார் ஹஷேமி ரஃப்சன்ஜானி (Akbar Hashemi Rafsanjani) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாரடைப்பால் திடீரென உயிரிழந்த  நிலையில், ஈரானிய மக்கள் அனைவரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அக்பாரை காப்பாற்றும் பொருட்டு வைத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை எனவும், அவர் டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே நேற்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 வயது நிரம்பிய அக்பார் திடீரென உயிரிழந்த செய்தி வெளியாகியவுடன், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையைச் சுற்றி பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் பின்னர் ஜமரான் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் அக்பாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறித்த மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது இறுதி ஊர்வலம் நாளை (செவ்வாய்கிழமை) டெஹ்ரானில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அக்பாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நாட்களை துக்க தினமாக அனுஷ்டிக்கும் படியும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இவரது உயிரிழப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பல ஈரானிய அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி அக்பாரின் உயிரிழப்பு ஈடுசெய்ய முடியாதது என தெரிவித்துள்ளனர்.

01-1
01-2

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner