Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பார்சிலோனா அணியின் சாதனையை சமன் செய்தது ரியல் மெட்ரிட்

In
Published: 04:56 GMT, Jan 9, 2017 |
0 Comments
1165
This post was written by : Anojkiyan
uty

கால்பந்து கழகங்களில் முன்னணி அணியாக திகழும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மெட்ரிட் அணி, அதே நாட்டின் முன்னணி அணியான பார்சிலோனா அணியின் சாதனை சமன் செய்துள்ளது.

தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் கழக அணியாக இந்த பார்சிலோனா அணியின் சாதனையையே ரியல் மெட்ரிட் அணி, சமன் செய்துள்ளது. இச்சாதனையை இதற்கு முன்னதாக எந்த கழக அணியும் முறியடித்ததில்லை. என்பது குறிப்படத்தக்கது.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற லா லகா தொடரின் கிரனாடா அணிக்கெதிரான போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 5-0 என வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடர்ச்சியாக 39 போட்டிகளில் ரியல் மெட்ரிட் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner