Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்ஸில் பேரூந்து விபத்து: நால்வர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

In ஐரோப்பா
Published: 05:31 GMT, Jan 9, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Sylviya

பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பேரூந்து விபத்தில், நால்வர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தகவலை பிரான்ஸ் உட்துறை அமைச்சர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். காயமுற்றவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அண்மைய தகவ்லகள் குறிப்பிடுகின்றன.

போர்த்துக்கீச நாட்டுக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று நேற்று காலை மத்திய பிரான்ஸில் விபத்துக்குள்ளானது. குறித்த பேரூந்தில் பயணித்த பெருமளவான பயணிகள் போர்த்துக்கீச நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அரச தரப்பு வழக்கறிஞர், “கட்டுப்பாட்டை இழந்தமையின் காரணமாகவே குறித்த விபத்து நேர்ந்தது” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “பிரான்ஸில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால், பாதைகள் வழுக்கும் தன்மையுடையதாய் காணப்படுகின்றமையும் குறித்த விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg