Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

குறைந்த ஊதியம் பெறுவோருக்கு 50 சதவீத சம்பள உயர்வு: அறிவித்தார் மடுரோ

In
Updated: 06:52 GMT, Jan 9, 2017 | Published: 06:25 GMT, Jan 9, 2017 |
0 Comments
1105
de6e5ef5-296a-4dc2-a543-82bb53709328

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவெலாவில் குறைந்த பட்ச ஊதியம் பெறுபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 50 சதவீத கொடுப்பனவு உயர்வினை வழங்க அந்நாட்டு ஜனாதிபதி புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.

வெனிசுவெலாவில் நீண்டகாலமாக நிலவிவரும் பொருளாதார நெக்கடி மற்றும் பணவீக்கப் பிரச்சினைகளின் காரணமாக நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை காக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவை அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பித்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. இதேவேளை, குறைந்தபட்ட ஊதியமாக 40 பொலிவர் அதாவது 60 அமெரிக்க டொலர்களை பெறுபவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 40 பொலிவர்களை மாதாந்த வருவாயாக கொண்டுள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இச் சம்பள உயர்வு போன்றே நாட்டின் ஆயுத படைகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த 50 சதவீத சம்பள உயர்வு உண்டு என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த நிக்கோலஸ் மடுரோ, ‘பொருளாதார யுத்தம் மற்றும் கொள்ளைக்காரர்களின் தாக்குதல் அதிகரித்துள்ள இந்த கால கட்டத்தில் நாம் நமது தொழிலாளர்களையும் வேலைவாய்ப்புக்களையும் பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)