Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சூறாவளி,தொடர் மழையால் அவதியுறும் கலிபோர்னிய மக்கள்

In
Published: 06:52 GMT, Jan 9, 2017 |
0 Comments
1160

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மற்றும், நாட்டின் ஏனைய மேற்குப் பகுதிகளையும் தாக்கிய மோசமான சூறாவளி காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளநீர் பெருக்கெடுத்து சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதாகவும், அதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வறட்சி நிலவிவந்த குறித்த பகுதியில் தற்போது இத்தகைய குறாவளி தாக்கம் மற்றும் மழைவீழ்ச்சி என்பன மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கலிபோர்னியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தொடர்ந்த கனமழை காரணமாக சுமார் 3 தொடக்கம் 7 அங்குலம் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், வேறு சில பகுதிகளில் 1 – 2 மீற்றர் அளவிற்கு பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ள தகவல்களிற்கு அமைய கலிபோர்னியா மற்றும் நவாடா ஆகிய மாநிலங்களில் சுமார் 40 இற்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் போன்றன பெருக்கெடுத்துள்ளதை அறியமுடிகின்றது.

இதேவேளை, கலிபோர்னியாவின் அவசர சேவைகள் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கையில், சன் பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஊற்றெடுக்கும் நாபா ஆற்றின் நீர்மட்டம் உயருவதாகவும், வெள்ள நீர் பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டால் அது நகர் பகுதிகளை மிக மோசமாக தாக்கியழிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், கலிபோர்னியாவின் சில நெடுஞ்சாலைகள் மண்சரிவு, மரங்கள் முறிந்துவிழல் மற்றும் நீர்ஊற்றுக்கள் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.