Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு

In
Updated: 12:46 GMT, Jan 9, 2017 | Published: 07:05 GMT, Jan 9, 2017 |
0 Comments
1294
icon_com
This post was written by : Sambavi
boko-haram-nigeria-army

நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

யோபே மாநிலத்தில் உள்ள புனியாடி இராணுவ முகாமுக்குள் நேற்று பின்னிரவில் புகுந்த பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் ஐந்து ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதாகவும், ராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணப்பாங்கில் ஆயுத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை பொக்கோ ஹராம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மேற்கொள்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர். அதுமாத்திரமின்றி பெண்கள் சிறுமிகள் என பலரையும் கடத்திச்சென்று பல ஈனச்செயல்களை செய்வது வருகின்றனர்.

வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள பொக்கோ ஹராம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, போர்னோ மாநில தலைநகரான மைடிகுரி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நேற்று பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg