சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக மகுடம் சூடினார் பாவ்டிஸ்டா அகுத்

22வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின், ஒற்றையர் பிரிவில் பாவ்டிஸ்டா அகுத் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இஸ்ரேலின் துடி செலாவும், ஸ்பெயினின் பாவ்டிஸ்டா அகுத்தும் பலப்பரீட்சை நடத்தினர்.
மெட்வதேவ் இப்போட்டியில் பாவ்டிஸ்டா அகுத்துக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாவ்டிஸ்டா அகுத் முதல்செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டையும் மெட்வதேவ் 4-6 என இழந்தார். இதனால் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று முதன்முறையாக சென்னை ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றார்.