Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சென்னை ஓபன்: போபண்ணா-ஜீவன் ஜோடி சம்பியன்

In
Published: 08:40 GMT, Jan 9, 2017 |
0 Comments
1079
roh

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, மற்றொரு இந்தியர்களான புராவ் ராஜா- திவிஜ் சரண் ஜோடியினை எதிர்கொண்டது.

21 ஆண்டு கால சென்னை ஓபன் வரலாற்றில் இறுதி போட்டியில் 4 இந்தியர்கள் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

விறுவிறுப்பான இந்த மோதலில் போபண்ணா கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

சாதனை படைத்த ரோகன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிக்கு 16 லட்சம் ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2வது இடத்தை பிடித்த புராவ்-திவிஜ் 8,50000 ரூபா பரிசாக வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)