Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

காவிரி விவகார வழக்கின் சாட்சியங்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

In
Published: 08:20 GMT, Jan 9, 2017 |
0 Comments
1062
kaveri-problem-tamil-nadu

இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு மேற்கொண்ட வழக்கின் சாட்சியங்களின் பட்டியலை இரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய இரண்டு மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு மாநிலங்களும் 4 வாரங்களில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என இதன் போது உத்தரவிடப்பட்டது. மேலும் குறித்த வழக்கு விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைதுள்ளது.

காவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுத்ததால் 2,400 கோடி ரூபா இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)