Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசூலின் டைக்ரீஸ் பகுதியை கைப்பற்றியது அரச படை

In உலகம்
Updated: 11:50 GMT, Jan 9, 2017 | Published: 10:15 GMT, Jan 9, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Sambavi
201701091153514804_iraqi-troops-enter-mosul-from-the-north_secvpf

ஈராக்கின் மோசூல் நகரில் உள்ள டைக்ரீஸ் நதிக்கரையை அந்நாட்டு அரச படை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள மோசூல் மற்றும் ஏனைய பல நகரங்களில் ஈராக்கிய அரச படைகள் போர் புரிந்து வருகின்றன. இந்த நிலையில், முக்கிய இலக்காக திகழும் மோசூலின் பல்வேறு பகுதிகளில் அரச படைகள் தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து பல பகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையிலேயே தற்போது ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மோசூல் மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. இதை மீட்பதற்காக ஈராக் படை கடந்த அக்டோபர் மாதம் முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இரு தரப்புக்கும் இடையில் நடைபெறும் கடுமையான மோதலின் காரணமாக மோசூல் நகரை சிறிது சிறிதாக ஈராக் படை மீட்டு வருகிறது. மேலும், நகரின் கிழக்கு பகுதியில் இருந்தும், தெற்கு பகுதியில் இருந்தும் படைகள் முன்னேறி வருகின்றன.

இதற்கமைய மோசூலில் உள்ள பலாடியத், சுக்காத் ஆகிய பகுதிகளை கைப்பற்றி உள்ள இராணுவம் தொடர்ந்து முன்னேறியது. மோசூல் நகரின் நடுவே ஓடும் டைக்ரீஸ் நதியின் மேற்கு பகுதி முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அப்பகுதியை தற்போது ஈராக் படைகள் கைப்பற்றியுள்ளன.

ஈராக் படைகள் முன்னேறி வந்ததை அடுத்து அங்கிருந்த பாலத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்து விட்டதாகவும், ஆற்றின் மறுமுனையில் நிற்கும் இராணுவம் ஆற்றை கடந்து உள்ளே செல்வதற்கு முயற்சித்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg