Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயர்தரத்தில் செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை

In இலங்கை
Updated: 13:33 GMT, Jan 10, 2017 | Published: 03:26 GMT, Jan 10, 2017 |
0 Comments
1460
This post was written by : Varshini

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தர்மரட்னம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தெற்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய மாணவர்களை அதிகமாகக் கொண்ட இப்பாடசாலையில் இம்முறை வெளியாகிய பரீட்சை பெறுபேற்றில் தொழிநுட்ப பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று வடமாகாணம் மற்றும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் மணிவேல் தர்மசீலன் எனும் மாணவன் பெற்று பாடசாலைக்கு மட்டுமல்லாது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்தோடு, கணிதப்பிரிவில் மனோகரன் அருண்ராஜ் ஏ.பி.சி. சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினைப் பெற்று செட்டிக்குளம் பகுதியில் இருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவான முதல் மாணவன் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளார். மொத்தமாக இப்பாடசாலையில் நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

கணிதப்பிரிவில் இப் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியது இதுவே முதற்தடவையென பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் கற்கும் இப்பாடசாலையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் இச் சாதனையை பெற்றுக்கொண்டதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg