Chrome Badge

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்

In
Updated: 04:17 GMT, Jan 10, 2017 | Published: 04:16 GMT, Jan 10, 2017 |
0 Comments
1077
fishermen

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தாயகம் திரும்புகின்றனர்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை அராசாங்கம் நேற்று (திங்கட்கிழமை) விடுதலை செய்தது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் விடுதியில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதனையடுத்து, தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று தாயகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“யாழ்ப்பாணம் சிறையில் கழிவறை சரியாக இல்லாததால் மனிதர்களே மனித கழிவுகளை அள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் சிறையில் கடும் துயரத்தை சந்தித்தோம்.

எங்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட எங்களுடைய படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

எங்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண இரு நாடுகளும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழக மீனவர்கள் 51 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்குமாறு தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தததையடுத்து மத்திய அரசு மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)