Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் காணிகளும் உற்பத்திகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன: சந்திரசேகரன்

In இலங்கை
Published: 04:16 GMT, Jan 10, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Varshini

விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை மட்டுமன்றி விவசாயிகளின் உற்பத்திகளை கொள்ளையடிக்கும் மற்றும் அவர்களுடைய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்காதவர்களே இன்று உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மலயாளபுரம், கிருஷ்ணபுரம், பாரதிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய அமைப்புக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

அத்தோடு, விவசாயிகளின் உழைப்பால் ஒரு சில ஆலைகளின் உரிமையாளர்களும் முதலாளிமாரும் கோடீஸ்வரர்களாக மாறிக்கொண்டு இருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில், விவசாயிகளோ தமது விவசாய நடவடிக்கைகளை கொண்டுசெல்ல முடியாமல் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் கட்சி, இன, மத பேதங்களை மறந்து விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென சந்திரசேகரன் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg