Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராகும் ட்ரம்பின் மருமகன்

In
Updated: 11:26 GMT, Jan 10, 2017 | Published: 05:42 GMT, Jan 10, 2017 |
0 Comments
1128

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக தனது மருமகனான ஜாரெட் குஷ்னரை (Jared Kushner) தெரிவுசெய்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை உள்ளடக்கியதாக இவரது பணி அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப், இவ்வாறு தனது மருமகனுக்கு முக்கிய அரச பொறுப்பை வழங்கியுள்ளமை பலர் மத்தியிலும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளதுடன், இந்த நியமனமானது பாரபட்சமானது எனத் தெரிவித்து இவ்விடயம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜனநாயகவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, நீதித்துறை மற்றும் அரசு நெறிமுறை அலுவலகம் ஆகியன குறித்த நியமனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றக் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய பங்கு வைத்த மருமகனான ஜாரெட், கட்டட நிறுவன அதிபரும் வர்த்தக நடவடிக்கைகளில் பரந்த ஆர்வம் கொண்டவரும் ஆவார்.

தனது மருமகனை பெரும் சொத்து என வர்ணித்த ட்ரம்ப், அவருக்கு தனது நிர்வாகத்தின் முக்கிய தலைமை பொறுப்பை வழங்குவதில் தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)