Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிபாவின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தெரிவு!

In
Updated: 10:47 GMT, Jan 10, 2017 | Published: 07:55 GMT, Jan 10, 2017 |
0 Comments
1196
ronaldo-the-best-awards-afp

பிபாவின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவாகியுள்ளார்.

பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டுக்கான பாலன் டி ஓர் (Ballon d’Or) விருதினை வென்றிருந்தார்.

இந்நிலையில், இந்த விருதும் ரொனால்டோவை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுச்சென்றுள்ளது. மேலும், இத் தேர்விற்கான வாக்கெடுப்பில், கிறிஸ்டியனோ ரொனால்டோ 34.54 சதவித வாக்குகளையும், லயனல் மெஸ்ஸி 26.42 சதவித வாக்குகளையும், அந்தோனியா கிறிஸ்மேன் 7.53 சதவித வாக்குகளையும் பெற்றனர்.

அதேபோல், பிபாவின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த கார்லி லோய்டு தெரிவானார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)