Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்திற்கு அறிவிப்பு

In இந்தியா
Updated: 10:59 GMT, Jan 10, 2017 | Published: 07:27 GMT, Jan 10, 2017 |
0 Comments
1187
This post was written by : Shailu

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசைபடகு மீனவ சங்கங்களின் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.இதில் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, இலங்கை வசமுள்ள 128 படகுகளையும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் உட்பட 20 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுக்கடலில் முழ்கிய 18 படகுகளுக்கு முழு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள துறைமுக மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சிறுபாண்மை மீனவர் விசைபடகு சங்க தலைவர் இருதயம் கருத்து தெரிவிக்கையில்,

‘ மீன்பிடியில் ஈடுப்படும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், நடுக்கடலில் அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

அத்தோடு, மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வதும், அதனை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்பது தொடர்கதையாகி வருகின்றது.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்களையும், படகுகளையும் பொங்கலுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல், தமிழகம் முழுவதும் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தவது என நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுத்துக்கப்பட்டுள்ளது.

ஆகவே போராட்டங்களை நடத்துவதும், கைவிடுவதும் அரசாங்கம் கையில்தான் உள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg