Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிராண்டன்பேர்க் நுழைவாயில் இஸ்ரேலிய தேசியக் கொடியின் வர்ணங்கள் ஒளிரவிடப்பட்டது

In
Updated: 12:25 GMT, Jan 10, 2017 | Published: 08:43 GMT, Jan 10, 2017 |
0 Comments
1185
This post was written by : Sylviya


இஸ்ரேலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஜேர்மனி தலைநகர் பேர்லினில் உள்ள பிராண்டன்பேர்க் நுழைவாயில், நேற்று இரவு இஸ்ரேலின் தேசியக் கொடியில் உள்ள வர்ணத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.

தேசங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலேயே குறித்த நுழைவாயில் இஸ்ரேலின் வர்ணங்களால் ஒளிரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆபிரிக்காவின் தலைமை மதத்தலைவர் வாரன் கோல்ட்ஸ்டெய்ன் (Warren Goldstein), “பிராண்டன்பேர்க் நுழை வாயிலில் இஸ்ரேலிய கொடி காணப்படுகின்றமையானது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. மேலும் உலக நாடுகளுக்கிடையிலான நல்லிணக்க சமிக்ஞையாகவும் இது காணப்படுகின்றது.

பொது மக்களின் உயிர்கள் , அவர்களது சொத்துக்கள் என்பன தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டுவருகின்றன. ஆகவே பாதிக்கப்படும் மக்களை நல்ல மனிதர்கள் காப்பாற்றும் நோக்குடன் கைகோர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி, இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்கா என்ற பேதங்களைத் தாண்டி மனிதநேயத்தை கட்டியெழுப்ப யாவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் வாரன் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்னர், ஜேர்மனியின் பேர்லின் கிறிஸ்மஸ் சந்தையிலும் இது போன்றதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.