Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அன்னை வேளாங்கன்னி மாதா சிலை இனந்தெரியாதோரால் உடைப்பு: செட்டிகுளத்தில் சம்பவம்

In
Updated: 10:41 GMT, Jan 10, 2017 | Published: 10:39 GMT, Jan 10, 2017 |
0 Comments
1309
This post was written by : Surenth
statue-of-ourlady-velanganni

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சிலை உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் சிலை நேற்று (திங்கட்கிழமை) இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

statue-of-ourlady-velanganni-01