வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

வெளிநாட்டு நாணயங்களை இலங்கையில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் இவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபரின் பயணப் பொதிகளை சோதனை செய்த போது, மிக சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க உதவிப் பணிப்பாளர் பராக்ரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 1070 யூரோக்களும் 4000 அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.