Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொது நீச்சல் பயிற்சி நிலையங்களில் முஸ்லிம் பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்

In ஐரோப்பா
Published: 12:44 GMT, Jan 10, 2017 |
0 Comments
1560
This post was written by : Sylviya
13-1

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் சேர்ந்து நீச்சல் பயிற்சி பெற்றுக்கொள்ளும் நிலையங்களில், முஸ்லிம் பெண்களும் நீச்சல் கற்க வேண்டும் என, சுவிட்ஸர்லாந்து மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீச்சல் கற்பிக்கும் பயிற்சி நிலையங்களில், பால் வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும், பல முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குறித்த பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க மறுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அனைவரும் நீச்சல் கற்கும் நிலையங்களிலேயே முஸ்லிம்களும் நீச்சல் கற்க வேண்டும்; எனும் கோரிக்கையை முன்வைத்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திடம் சுவிட்ஸர்லாந்து வழக்கு தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பில் தீர்ப்பளித்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், “இந்த விடயத்தால் ஒருவரது மத ரீதியான சுதந்திரத்தில் எமக்கு தலையீடு செய்ய நேர்ந்துள்ளது. ஆனால் இந்த விடயம் உரிமை மீறல்களுக்கு ஒருவரை இட்டுச் செல்லாது என்பது புலனாகின்றது. எனவே முஸ்லிம்களும் குறித்த பயிற்சி நிலையங்களிலேயே நீச்சல் கற்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

இருப்பினும், பருவம் அடைந்த முஸ்லிம் பெண் குழந்தைகள் குறித்த பயிற்சி நிலையங்களுக்கு சமூகமளிக்காதிருப்பது ஏற்கத்தக்கது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13-2
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg