Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில் சீனா, மஹிந்தவிடம் விளக்கம் கோரியுள்ளது

In இலங்கை
Updated: 16:22 GMT, Jan 10, 2017 | Published: 13:53 GMT, Jan 10, 2017 |
0 Comments
1873
This post was written by : Surenth

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமைக்கு, சீனா விளக்கம் கோரியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கிற்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போதே, அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகள் ஒதுக்கீட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணம் தொடர்பாக சீன தூதுவர் விளக்கம் கோரியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் திட்டத்தை கூட்டு எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அவரது ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg