அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: இர்பான் வெளியே-ஜுனைத்கான் உள்ளே

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக 27 வயதாகும் ஜுனைத்கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த மொஹமட் இர்பான், பாகிஸ்தானில் வசித்து வந்த அவரது தாயார் காலமானதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். இதனால், ஜுனைத்கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜுனைத்கான், இதுவரை 78 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் 14 போட்டியில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.
அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 13ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகிறது. 2வது போட்டி 15ஆம் திகதி மெல்போர்னிலும், 3வது போட்டி பெர்த்தில் 19ஆம் திகதியும், 4வது போட்டி சிட்னியில் 22ஆம் திகதியும், 5வது மற்றும் இறுதி போட்டி அடிலெய்டில் 26ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.