Chrome Badge

2026ஆம் நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள்!

In
Updated: 06:43 GMT, Jan 11, 2017 | Published: 05:21 GMT, Jan 11, 2017 |
0 Comments
1038
fifa

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க, உலகில் உள்ள விளையாட்டு அமைப்புகளில் மிகப்பெரிய அமைப்பான பிபா என்னும் கால்பந்து சம்மேளனம் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த 48 அணிகளும் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபா அமைப்பில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஆனால் உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்க இயலும். பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் தகுதிச் சுற்று நடைபெறும். அதில் இருந்து 32 நாடுகள் பங்கேற்கும். இதில் போட்டியை நடத்தும் நாடு தகுதிச் சுற்றில் பங்கேற்காமல் நேரடியாக தகுதி பெறும்.

32 அணிகள் என்பதால் பெரும்பாலான முன்னணி அணிகளுக்கு இடம்கிடைக்காமல் இருந்தது. இதனால் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போர்த்துக்கலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)