Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தீபாவின் புதிய அமைப்பிற்கான உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் தீவிரம்

In
Updated: 06:00 GMT, Jan 11, 2017 | Published: 05:06 GMT, Jan 11, 2017 |
0 Comments
1228
This post was written by : Shailu
deepa-peravai

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ‘இளைய புரட்சித் தலைவி தீபா (அம்மா) பேரவை’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பிற்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க.-வினரின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் இதற்கான படிவம் கொடுக்கப்பட்டு விநியோகிக்ப்பட்டு வருகின்றது.

உறுப்பினர் சேர்க்கை படிவத்தின் மேல்பகுதியில் ஒருபுறம் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் இரட்டை இலை சின்னமும், மறுபுறத்தில் தீபா படத்துடன் இரட்டை ரோஜாவும் அச்சிடப்பட்டுள்ளது.

இதுவரை அரசியல் களத்தை கண்டிராத தீபா, தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் ஆதரவுடன் அரசியலில் ஈடுபட உள்ளார்.

இதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு முழுவதும் தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே சில பகுதிகளில் தீபாவுக்கு ஆதரவாக இரட்டை ரோஜாவை சின்னமாக அறிவித்து தனிக்கட்சியை ஆரம்பித்து உள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் தீபாவின் ஆதரவாளர்கள் பேரவை ஆரம்பித்திருப்பதால், தமிழக அரசியலில் தீபா முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த முடிவால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.

தீபா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில், அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்ட தீபா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் புதிய பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான எதிர்வருகிற 17ஆம் திகதி புதிய பயணம் ஆரம்பமாகும் என அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.