Chrome Badge
Athavan News

தீவிரவாதத்திற்கு எதிராக ஜேர்மன்- பிரான்ஸ் இணைந்து போராடும்

In
Published: 05:06 GMT, Jan 11, 2017 |
0 Comments
1097

ஜேர்மனியும் பிரான்ஸும் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் சுயேட்சை வேட்பாளர் இம்மானுவல் மேக்ரோன் தெரிவித்தார்.

ஜேர்மன் தலைநகருக்கு விஜயம் செய்துள்ள இம்மானுவல், 12 பேரை காவுகொண்ட கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் இடம்பெற்ற பெர்லின் பகுதியை பார்வையிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு குறித்து அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘பிரான்ஸைவிட ஜேர்மனியே அதிகமுறை தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து உள்ளது.

எனவே, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை பிரான்ஸும் ஜேர்மனியும் ஒன்றிணைந்தே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

குடியேற்றவாசிகளுக்கான ஒருங்கிணைப்பு திட்டம் குறித்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜேர்மன் வந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் இம்மானுவல், பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)