Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுக்கு பின்னடைவு: நாடு விரைகிறார் சப்பிராஸ் ஹமட்

In கிாிக்கட்
Updated: 05:53 GMT, Jan 11, 2017 | Published: 05:53 GMT, Jan 11, 2017 |
0 Comments
1466
This post was written by : Anojkiyan

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உப தலைவரும், விக்கெட் காப்பாளருமான சப்பிராஸ் ஹமட் தயாராகி கொண்டிருக்கும் நிலையில், அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் கராச்சியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாக அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஹமட்டுக்குப் பதிலாக மொஹமட் ரிஸ்வான் மாற்று விக்கெட் காப்பாளராக ஏற்கனவே அணியில் இடம்பிடித்துள்ளதனால் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அந்த அணியின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான், தனது தாயார் இறந்ததால் பாகிஸ்தான் திரும்பியுள்ள நிலையில், சப்பிராஸ் ஹமட்டின் இழப்பும் அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 13ஆம் திகதி, பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg