Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

போட்டி அட்டவணை குறித்து கடுமையாக சாடும் வோர்னர்

In
Published: 06:38 GMT, Jan 11, 2017 |
0 Comments
1198
external

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடர் முடிந்து ஒய்வில்லாமல் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் களம் காணும் அவுஸ்திரேலிய அணியின் போட்டி அட்டவணை குறித்து அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுவரை ரி-ருவென்ரி உலகக்கிண்ணத்தை கைப்பற்றாத அவுஸ்திரேலிய அணி, இப்போட்டிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து வருகிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் இதுபோன்ற ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டதற்கு வோர்னர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ரி;-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி அடுத்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2வது போட்டி 19ஆம் திகதியும், 3வது மற்றும் இறுதி போட்டி 22ஆம் திகதியும் நடைபெறவுள்ளது

அடுத்த நாள் 23ஆம் திகதி இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி விளையாட இருக்கிறது. அந்த அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் டுபாயில் சென்று பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது.

டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் அந்த அணியின் முன்னணி வீரர்களான வோர்னர், அணிதலைவர் ஸ்டீவ் ஸ்மித், கவாஜா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ரி-ருவென்ரி அணியில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது.

சொந்த மண்ணிலேயே விளையாடும் வாய்ப்பை வோர்னர் தவறவிட்டுள்ளதால், அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுகுறித்து வோர்னர் கூறுகையில்,

”அவுஸ்திரேலியாதான் இந்த அட்டவணைக்கு முக்கிய காரணம். இங்கு ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நமது அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வெளிநாடு செல்ல இருக்கிறோம். இது எந்தவித பலனையும் உருவாக்கப்போவதில்லை. இது மிக மிக மோசமான அட்டவணை” என கூறினார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)