Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குயின்ஸ்லாந்தில் சுற்றுலா விமானம் விபத்து: யுவதி உயிரிழப்பு

In
Published: 06:04 GMT, Jan 11, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Sambavi

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விமான விபத்தில் 29 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். விபத்திற்குள்ளான குறித்த விமானம் குயின்ஸ்லாந்து கடற்பரப்பில் முறிந்து விழுந்துள்ளது.

அவசர சேவைகள் பணிமனை தெரிவித்துள்ள தகவல்களின் பிரகாரம், இரண்டு சுற்றுலா பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் விமானங்கள் ஒன்றாக வானில் பறந்ததாகவும் அப்போதே தீவின் மத்திய பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த யுவதி பிரித்தானிய பிரஜை எனவும், மேலும் காயமடைந்த இரண்டு பேரில் 21 வயதான அயர்லாந்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, விமானியும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விலையில், விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவான விபரங்கள் எவையும் தெரியவராத நிலையில், பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg