Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தலைவர் பதவியில் இருந்து தோல்வியுடன் விடைபெற்றார் டோனி!

In கிாிக்கட்
Updated: 08:07 GMT, Jan 11, 2017 | Published: 07:59 GMT, Jan 11, 2017 |
0 Comments
1394
This post was written by : Anojkiyan
CRICKET-IND-ENG

மும்பையில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டியில், இங்கிலாந்து லெவன் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ஒட்டங்களை பெற்றது. இதில் அதிகபட்ச ஒட்டமாக, ராய்டு 100 ஒட்டங்களையும் அணிதலைவர் டோனி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 68 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இதைதொடர்ந்து சற்று கடின வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து லெவன் அணி, யாரும் எதிர்பாராத வகையில், 48.5 ஒவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பிளிங்ஸ் அதிகபட்சமாக 93 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டோனி தலைமை தாங்கிய இறுதிபோட்டி என்பதால் அனைவரினதும் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் துரதிஷ்டவசமாக இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் டோனியின் கடடையை டோனி செவ்வனே செய்தார் என கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

இப்போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டோனி, 40 பந்துகளில் எட்டு பவுண்ரிகள், இரண்டு சிக்ஸர்கள் அடங்களாக 68 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். இறுதி ஒவரில் மட்டும் 23 ஒட்டங்களை பெற்றார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.