Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஜல்லிக்கட்டு அனுமதி: மத்திய அமைச்சரிடம் அ.தி.மு.க-வினர் மனு கையளிப்பு

In
Updated: 11:21 GMT, Jan 11, 2017 | Published: 06:50 GMT, Jan 11, 2017 |
0 Comments
1110
jallikattu

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியில் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவை மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

இதன்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும், இதற்காக அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து மத்திய அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.இதன்போது, பேசிய மத்திய அமைச்சர், ‘ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும'; என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கருத்து தெரிவித்த தம்பிதுரை கருத்து தெரிவிக்கையில்,’ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் தமிழக கலாச்சாரம் பாதுகாக்கப்படும். ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்தப்படுவதில்லை.

எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறோம். ஜல்லிக்கட்டுக்காக அவசர கட்டம் கொண்டு வரப்பட்டால் இளைஞர்கள் மகிழ்வார்கள்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கும் அ.தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)