Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

In
Updated: 08:16 GMT, Jan 11, 2017 | Published: 07:26 GMT, Jan 11, 2017 |
0 Comments
1112
This post was written by : Shailu
security

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதோடு, உள்நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வருகிற 26ஆம் திகதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார். அத்தோடு, நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே இதனை முன்னிட்டு டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களிலும், முக்கிய இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பொலிஸார் தயார் நிலையில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திலும், வெளிநாட்டு விமான நிலையத்திலும் இன்று (புதன்கிழமை) முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறதையடுத்து, தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner