Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தடை பிறகு ஏப்ரல் மாதம் மறுபிரவேசம் எடுக்கும் ஷரபோவா

In டெனிஸ்
Published: 08:35 GMT, Jan 11, 2017 |
0 Comments
1100
This post was written by : Anojkiyan
maria-sharapova-doping-scandal

15 மாத தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மரிய ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது தடை காலம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது. மீண்டும் டென்னிஸ் போட்டிக்கு திரும்ப தன்னை ஆயத்தப்படுத்தி வரும் ஷரபோவா, தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் ஜேர்மனியில் நடக்கும் ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் மீண்டும் களமிறங்கவுள்ளார்.

ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் தொடரில், மரிய ஷரபோவா மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.