Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

நாணயத்தாள்கள் விவகாரத்தில் மோடி ஹிட்லரை போல நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 10:19 GMT, Jan 11, 2017 | Published: 08:04 GMT, Jan 11, 2017 |
0 Comments
1111
This post was written by : Shailu
karnataka-congress

நாணயத்தாள்கள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிட்லரை போல நடந்து கொள்கிறார் என கர்நாடக காங்கிரஸ் தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

உயர் மதிப்பிலான நாணயத்தாள்கள் தடை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூர் நகர மண்டபம்  முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

‘உயர் மதிப்பிலான நாணயத்தாள்களை தடை செய்ததன் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதோடு, பிரதமர் மோடியின் திடீர் முடிவால் நாடே பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது. இந்த விடயத்தில் ஹிட்லரை போல மோடியும் நடந்து கொள்கிறார்.

எனவே மோடியின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இது குறித்து இன்று (புதன்கிழமை) டெல்லியில் ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதோடு, அதன் பிறகு மாநிலத்தில் பரவலாக போராட்டம் நடத்தப்படும்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.