Chrome Badge

ரசிகர்களின் வருகையை கண்டு நெகிழ்ந்து போன டோனி

In
Published: 09:54 GMT, Jan 11, 2017 |
0 Comments
1118
CRICKET-IND-ENG

டோனி இறுதியாக தலைவர் பதவியில் நீடித்த நேற்றைய போட்டியை காண அவரின் ரசிகர்கள் படையெடுத்ததை கண்டு அவரே நெகிழ்ந்து போனார்.

நேற்று (செவ்வாய்கிழமை) மும்பையில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில், டோனி இறுதியாக தலைமை வகித்தார்.

இதனால், இப் போட்டியை காண அவரின் ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் அலை மோதியது. இதனை கண்டு உணர்ச்சி வசப்பட்ட டோனி, நாணய சுழற்சி போடப்பட்ட பின் மிகவும் உருக்கமாக பேசினார். இதன்போது அவர் கூறுகையில்,

‘உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. 2007ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் எனக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள். இவ்வளவு ரசிகர்கள் வந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது பயிற்சி போட்டி என்றாலும் கூட உங்களின் வருகையை பார்க்கும் போது, என் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து உள்ளர்கள் என்பதை உணர முடிகிறது’ என உருக்கமாக பேசினார்.

பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணி தோல்வியை தழுவினாலும், டோனி ரசிகர்களை ஏமாற்றவில்லை. 8 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 68 ஒட்டங்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

மேலும், டோனி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார். டோனியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். உடனே டோனி, ஆடுகளத்தை மிதித்து விடாதீர்கள் என்று அவரை பார்த்து கூறினார். அந்த ரசிகர் பாய்ந்து செய்து டோனியின் பக்கம் வந்தார். ஆசி பெறுவதற்காக குனிந்து டோனியின் கால்களை பிடித்தார். பிறகு பாதுகாவலர்கள் அந்த ரசிகரை வெளியேற்றினர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)