Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஏழு வயதுச் சிறுமி கேற்றி கொலை : 15 வயது சிறுமி கைது

In
Updated: 10:09 GMT, Jan 11, 2017 | Published: 10:05 GMT, Jan 11, 2017 |
0 Comments
1365
icon_com
This post was written by : S.K.Guna
katie-rough

ஏழு வயதான சிறுமி கேற்றி ரஃப் கொலை செய்யப்பட்ட துயரச்சம்பவம் யோர்க் பிராந்தியம் வூட்தோர்ப் (Woodthorpe) பகுதியில் இடம்பெற்றது.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக 15 வயது நிரம்பிய சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்த் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தச் சிறுமியிடம் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடிய ஆயுதம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்களன்று Woodthorpe பகுதியில் உள்ள மைதானத்தின் நடைபாதையில் சிறுமி கேற்றி ரஃப் கடுமையான காயங்களுடன் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

நோர்த் யோர்க் பிராந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சிறுமி இன்று புதன்கிழமை யோர்க் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெஸ்ட்பீல்ட் ஆரம்ப பாடசாலையில் ( Westfield Primary School) கல்விகற்றுவந்த தமது மகள் கேற்றி ரஃப் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி எனவும் எப்போதும் இன்முகத்துடன் இருந்ததாகவும் பெற்றோர்களான போல் ரஃப் – அலிசன் ரஃப் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கேற்றி ரஃப் இன் கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை தடயவியல் ஆராச்சியாளர்களும் போலீசாரும் கூட்டாகச் சேர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg