Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

டோனி எடுத்த முடிவு தன் கிரிக்கெட் எதிர்காலத்தையே மாற்றி விட்டது: ரோஹித் நெகிழ்ச்சி

In
Published: 11:10 GMT, Jan 11, 2017 |
0 Comments
1428
dr

ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராகத் தன்னை களமிறக்க டோனி எடுத்த முடிவு தன் கிரிக்கெட் எதிர்காலத்தையே மாற்றி விட்டதாக அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனமொன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தொடக்க வீரராக என்னைக் களமிறக்க அணித்தலைவர் டோனி எடுத்த முடிவு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனையடுத்து நான் சிறப்பான துடுப்பாட்ட வீரராக முடிந்தது. அதாவது என் துடுப்பாட்டத்தை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல உதவியாக இருந்தது.

அவர் ஒருநாள் என்னிடம் வந்து ‘நீ தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ நன்றாக துடுப்பெடுத்தாடுவாய் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. என கூறியதாக சர்மா கூறினார்.