Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி: பிரச்சாரத்திற்கு தயாராகும் ராகுல்- அகிலேஷ் யாதவ்

In
Updated: 11:36 GMT, Jan 11, 2017 | Published: 11:16 GMT, Jan 11, 2017 |
0 Comments
1163
This post was written by : Shailu
rahul-aki

உத்தரபிரதேச தேர்தலில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருவது உறுதியாகியுள்ள நிலையில், ராகுல்காந்தியும், அகிலேஷ் யாதவும் இணைந்து பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

உத்தரபிரதேசத்தில் பெப்ரவரி 11ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகிலேஷ் தரப்புக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் பட்சத்தில், அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தையும் இடம்பெற்று வருகின்ற நிலையில், ராகுல் காந்தியுடன் அகிலேஷ் இணைந்து பிரசாரம் செய்வதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னம் யாருக்கு கிடைக்கும் என எதிர்வரும் 13ஆம் திகதி, தேர்தல் ஆணையம் முடிவு செய்யவுள்ளது.

இதனை தொடர்ந்து அன்றைய தினமே காங்கிரசுடனான கூட்டணியை அகிலேஷ் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிற நிலையில் தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் உள்ள சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner